Monday, August 13, 2018

என்னை யாரும் லூசு பொண்ணுன்னு முத்திரை குத்திடக் கூடாது: விஜய் சேதுபதி தோழி மடோனா


என்னை யாரும் லூசு பொண்ணுன்னு முத்திரை குத்திடக் கூடாது: விஜய் சேதுபதி தோழி மடோனா

சென்னை: என்னை யாரும் லூசு பெண் என்று முத்திரை குத்துவதை விரும்பவில்லை என நடிகை மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். பிரேமம் படம் மூலம் பிரபலமான மடோனா செபாஸ்டியன் தமிழ் திரையுலகிலும் பிரபலமாகிவிட்டார். விஜய் சேதுபதியுடன் சேர்ந்து அவர் நடித்த ஜுங்கா படம் அண்மையில் வெளியானது. படங்களை தேர்வு செய்ய மடோனா ரொம்பவே யோசிக்கிறார். தன்னை தேடி வரும் பட வாய்ப்புகளை எல்லாம் அவர் ஏற்பது இல்லை. இது குறித்து அவர் கூறியதாவது


குடும்பம்

 
நான் பார்த்து பார்த்து தான் படங்களை தேர்வு செய்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் தேவை. குடும்பம் மற்றும் நமக்கு பிடித்த விஷயங்களுக்கு நேரம் செலவிடாமல் உழைத்து என்ன பலன்? எந்த வகையான படங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். நான் தற்போது கிச்சா சுதீப் ஜோடியாக கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் பிறகு தெலுங்கு படத்தில் நடிக்கிறேன்.
 

சினிமா

நான் ஆறு வயதில் இருந்து பாடிக் கொண்டிருக்கிறேன். தற்போது நடிப்பில் பிசியாக இருப்பதால் பாட்டு பாட முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. நான் மியூசிக் பேண்ட் வைத்துள்ளேன், விரைவில் தமிழ் பாடலை வெளியிடுவேன். நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதால் பாட்டு பாட முடியவில்லை.

லூசு


நான் பல வகையான உணர்ச்சிகளை காட்டும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இது லூசு பொண்ணு என்று முத்திரை குத்திவிட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். சும்மா வந்து முகத்தை காட்டிவிட்டு போகும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை. எனக்கு ஜிம்மில் ஒர்க்அவுட் செய்ய பிடிக்கும். அதற்காக ஒல்லிக்குச்சியாக இருக்க பிடிக்காது. நான் ரொம்ப நன்றாக சாப்பிடுவேன். எனக்கு தேவையில்லாமல் வெளியே செல்ல பிடிக்காது. நேரம் கிடைக்கும் போது எல்லாம் வீட்டில் தான் இருப்பேன்l

 


விஜய் சேதுபதி
 
என் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் சினிமா துறையை சேராதவர்கள். சினிமா துறையில் விஜய் சேதுபதி எனக்கு நெருக்கமான நண்பர். பிரேமம் படத்தில் என்னுடன் நடித்த சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரனுடன் முன்பு டச்சில் இருந்தேன். தற்போது மூன்று பேருமே பிசியாக இருப்பதால் பேசிக் கொள்ள முடியவில்லை. அனுபமாவுடன் அவ்வப்போது டச்சில் இருந்தேன். சாய் நன்றாக இருக்கிறார் என நம்புகிறேன் என்றார் மடோனா.


 


No comments:

Post a Comment