Saturday, August 25, 2018

விஸ்வாசம் படத்தில் இப்படி ஒரு அசத்தலான விசயமா! போடு அமர்க்களம் தான்

விஸ்வாசம் படத்தில் இப்படி ஒரு அசத்தலான விசயமா! போடு அமர்க்களம் தான்

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று அதிகாலை வெளியானது. டுவிட்டரில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிகாலையில் மிகவும் Peak ல் இருந்தது இந்த போஸ்டரால் தானாம். இதனால் ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்தனர்.
இப்படத்தில் அஜித் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பது உறுதியாகிவிட்டது. அண்மையில் கூட ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயன் இப்படத்திற்கான சண்டை காட்சிகளை எடுத்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தில் அஜித் மதுரைக்காரராக நடித்திருக்கிறாராம். அதுமட்டுமல்ல பக்கா மதுரை தமிழில் தான் பேசுவார். மதுரையில் அஜித் ரசிகர்கள் அதிகம் இருப்பது அனைவரும் அறிந்ததே.


 

No comments:

Post a Comment