கிகி சேலஞ்சை நிறைய பேர் செய்து பார்த்திருப்பீங்க காஜல் செய்து பார்த்திருக்கீங்களா! ஆனால் கார் கிடையாது
கிகி சேலஞ்ச் உலகம் முழுவதும் நோய் போல தொற்றி கொண்டு வரும் ஒருவகை கேம். அதாவது ஓடும் காரிலிருந்து இறங்கி காரில் பாடும் பாட்டிற்கு நகரும் காருடனே நடனமாட வேண்டும். அதுதான் இதோட சேலஞ்ச். விபத்துகள் எளிதாக ஏற்பட கூடும் இந்த கேமிற்கு போலீஸாரிடம் இருந்து பலத்த கண்டங்கள் வந்துள்ளன.ஆனாலும் இந்த சேலஞ்சை பிரபலங்கள் முதல் பலரும் செய்து கொண்டுதான் வருகின்றனர். நடிகை ரெஜினாவும் இந்த சேலஞ்சை சில நாட்களுக்கு முன் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் முன்னணி நடிகை காஜல் அகர்வாலும் இந்த சேலஞ்ச் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால் என்ன, இந்த சேலஞ்சை பாதுகாப்பாகவும் செய்யலாம் என்றபடி வீல்சேரில் ஒரு நடிகருடன் செய்துள்ளார்.
No comments:
Post a Comment