Monday, August 13, 2018

நடிகை கொடுத்த 'சரக்கு பார்ட்டி'... குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்!

நடிகை கொடுத்த 'சரக்கு பார்ட்டி'... குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்!


சென்னை: நடிகை சாயிஷாவின் பிறந்த நாள் விழாவில் சினிமா பிரபலங்கள் பலரும் மதுபோதையில் கும்மாளமிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடித்த வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினா அறிமுகமானவர் சாயிஷா. தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்து, முன்னணி நாயகியாக வளர்ந்து வருகிறார்.

இவர் தனது 21வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி நேற்று முன் தினம் இரவு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சினிமா பிரபலங்களுக்கு சாயிஷா பார்ட்டி கொடுத்தார். அதில் நடிகர்கள் பிரவுதேவா, ஆர்யா, சதீஷ், சவுந்தர்ராஜா மற்றும் இயக்குனர் விஜய், தயாரிப்பாளர்கள் என பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்
 
 


இரவில் நடந்த பிறந்தநாள் பார்டியில் சாயிஷா கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். விடிய, விடிய நடந்த பிறந்தநாள் விழாவில் மது விருந்தும் அளிக்கப்பட்டது. பார்டியில் பங்கேற்ற பிரபலங்கள் பலர் மதுபோதையில் கும்மாளமிட்டனர். இது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது .

No comments:

Post a Comment