Monday, August 13, 2018

ஓடு ராஜா ஓடு... செட்டாப் பாக்ஸ் பிரச்சினைக்காக தெருத்தெருவாக ஓடிய நாசர்

ஓடு ராஜா ஓடு... செட்டாப் பாக்ஸ் பிரச்சினைக்காக தெருத்தெருவாக ஓடிய நாசர் 

சென்னை: செட்டாப் பாக்ஸ் பிரச்சினை பற்றி பேசும் ஓடு ராஜா ஓடு படத்திற்காக தெருத்தெருவாக ஓடியதாக நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். விஜய் மூலன் டாக்கீஸ் தயாரிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் என இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள படம் ஓடு ராஜா ஓடு. இப்படத்தில் ஜோக்கர் படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த குருசோமசுந்தரம் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார். அவர் தவிர நாசர், 'லென்ஸ்' அனந்த்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
























காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன்-மனைவியின் சந்தோஷமான வாழ்க்கையில், 'செட்டாப் பாக்ஸ்' எந்த அளவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி, அவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது? என்பது கதை. நான்கு முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்டு 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை கலந்து இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது விழா மேடையில் நடிகர் நாசர் பேசியதாவது, "இப்போது சினிமாவுக்கு வரும் இயக்குநர்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் வித்தியாசமான படங்கள் நிறைய வருகின்றன. இந்தப் படத்தில் கூட கதை சொல்லும் போதே மனதிற்குள் ஊடுருவியது. எல்லாப் படத்திற்கும் நாம் முழு உழைப்பையும் தந்துவிட மாட்டோம். ஒருசில படங்கள் மட்டுமே நாம் அதீத ஈடுபாட்டுடன் நடிக்கும் வகையில் இருக்கும். அந்தவகையில் இப்படத்தில் நான் அதிக ஈடுபாட்டுடன் நடித்தேன். படத்தலைப்பைப் போலவே, படப்பிடிப்பில் பல நாட்கள் நானும் தெருத்தெருவாக ஓடினேன். இலவசமாக எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கிறதோ, அங்கெல்லாம் ஓடினோம்" என தனது பட அனுபவங்களை நாசர் தெரிவித்துள்ளார்.







No comments:

Post a Comment