Friday, August 10, 2018

இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல

இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல

தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி வழியையும் தனி ஸ்டைலையும் வைத்திருப்பவர் நடிகர் அஜித். விருது விழாக்களை எல்லாம் சிறிதும் யோசிக்காமல் உதறி தள்ளுபவர், ஆனால் பிரபலங்களின் மரணம், விபத்து போன்ற அசம்பாவிதங்களுக்கு முதல் ஆளாக ஒடி வருவார்.
அதுபோல தான் தற்போது கலைஞரின் மரணத்தின் போதும் வந்திருந்தார். மேலும் அதற்காக எத்தனை இடையூறுகள் வந்தாலும் அத்தனையையும் சந்திக்க கூடியவர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மரணத்தின் போது அஜித் டெல்லியில் இருந்துள்ளார். அப்போது பயங்கரமான மழை, டெல்லியில் இருந்து ஒரு விமானமும் சென்னைக்கு வரவில்லை. அதனால் அவரே அந்த மழையிலும் கார் ஓட்டி வேறொரு நகரத்துக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார்.
இதை அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த ஆச்சிரியம் அடைந்தனர். அஜித்தின் புகழை மேலும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தனர்.


 

No comments:

Post a Comment