Wednesday, September 2, 2020

Friendship Tamil Movie Trailer

Friendship Tamil Movie Trailer






Tuesday, September 1, 2020

பிரபல காமெடி நடிகைக்கு நிச்சயதார்த்தம்: குவிந்த வாழ்த்துக்கள்

தமிழ் திரை உலக பிரபல காமெடி நடிகைக்கு நிச்சயதார்த்தம் ஆனதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ’நீதானே என் பொன்வசந்தம்’ என்ற திரைப்படத்தில் சமந்தாவுக்கு தோழியாக அறிமுகமானவர் நடிகை வித்யூலேகா. அதன் பின்னர் அவர் ’ஜில்லா’ ’வீரம்’ ’வேதாளம்’ ’தீயா வேலை செய்யணும் குமாரு’ ’புலி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகை வித்யூலேகாவுக்கு கடந்த 26ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் மாப்பிள்ளை சஞ்சய் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நேரத்தில் இந்த நிச்சயதார்த்தம் நடந்ததால் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் வித்யூலேகா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
நடிகை வித்யூலேகா இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை செய்துள்ளார் என்பதும், வித்யூலேகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆனதை அடுத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Thursday, September 27, 2018

செக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம்

செக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம்

 தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு படம் எதிர்ப்பார்ப்பை எகிற வைப்பவர் தான் மணிரத்னம். அவருடைய இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது செக்கச்சிவந்த வானம், ரகுமான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருப்பார், இது நாயகன் ஸ்டைல் படம் என்று, மேலும் மணிரத்னம் புல் ஃபார்மில் உள்ளார் என்றும் தெரிவித்தார், அவரின் வார்த்தைகள் உண்மையானதா? பார்ப்போம்.

கதைக்களம்

பிரகாஷ்ராஜ் தமிழகத்தின் மிகப்பெரும் புள்ளி, விஜய் சேதுபதி ட்ரைலரில் சொல்வது போல் மதிப்பிற்கு உரிய கிரிமினல் தான் பிரகாஷ்ராஜ்.

இவரை ஆரம்பத்திலேயே ஒரு கும்பல் கொல்ல முயற்சி செய்கின்றது. அதை தொடர்ந்து அவரின் மூன்று மகன்களும் யார் அப்பாவை இப்படி செய்தார்கள் என தேட ஆரம்பிக்கின்றனர்.

ஒருவரின் மீது ஒருவருக்கு சந்தேகம், இடையில் பெரியவர் இடத்தை யார் பிடிப்பது என்று போட்டியும் கூட.

ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜ் இறக்க, அவரை கொல்ல முயற்சி செய்தது யார், அந்த இடம் யாருக்கு என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என 4 நடிகர்களை வைத்து இவர்கள் அனைவருக்கும் சரியான கதாபாத்திரம் கொடுத்து அதை வெற்றிக்கரமாக முடிப்பது சாதாரண விஷயமில்லை. அப்படி ஒரு விஷயத்தை மணிரத்னத்தை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று இந்த வயதில் நிரூபித்து நிமிர்ந்து நிற்கின்றார்.

அரவிந்த்சாமி படத்தின் 4 கதாபாத்திரங்களில் கை ஓங்கி நிற்பது இவருக்கு தான், முரடன் அப்பா சொல்வதை மட்டுமே கேட்டு சுதந்திரம் என்றே இல்லாமல் அடிதடி என்று வாழ்ந்தே, வாழ்க்கையை ஓட்டுகின்றார். அவர் அப்பாவின் இடத்தை பிடிக்க விரும்புவது, அதற்கான விஷயங்களை மேற்கொள்வது, அதன் இழப்பு, சோகம், வருத்தம் என செம்ம ஸ்கோர் செய்கின்றார்.

வெளிநாட்டு ஜாலி பறவைகளாக அருண்விஜய், சிம்பு. எல்லோருக்கும் ஒரே நோக்கம் பிரகாஷ்ராஜ் இடத்திற்கு யார் வருவது என்பது தான், அருண் விஜய் செம்ம ஸ்டைலிஷாக இருக்கின்றார், இவரை வைத்து எத்தனை பெரிய ஆக்‌ஷன் காட்சிகளையும் அசால்ட்டாக எடுத்துவிடலாம், அதிலும் நீச்சல் குளத்தில் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பிரமிப்பு.

சிம்பு கடைக்குட்டி, அண்ணனால் தனக்கு ஒரு வலை சுற்றப்படுகின்றது என அறிந்து அவர் ஒரு கேங்கை தேற்றி களத்தில் இறங்குகின்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவிற்கு பல எமோஷனில் நடிக்கும் ஒரு வாய்ப்பு, அதுவும் தன் அம்மாவிடம் ‘நீ எனக்கு மட்டும் அம்மாவா இருமா’ என்று அழும் இடத்தில் சூப்பர். இந்த சிம்பு தான் இத்தனை நாட்கள் மிஸ்ஸிங்.

விஜய் சேதுபதி அட மணிரத்னம் படத்தில் மீண்டும் ஒரு வைலன்ஸ் சைட் மௌனராகம் கார்த்திக் என்றே சொல்லலாம். அவருக்கே உரிய ஸ்டைலில் வசனத்தில் வரும் காட்சிகளில் எல்லாம் சிக்ஸர் தான், கடைசி வரை ‘நீங்க நல்லவரா, கெட்டவரா?’ என்று ஆடியன்ஸ் கேட்கும்படியே அவர் கதாபாத்திரம் கொண்டு போனது ரசிக்க வைக்கின்றது.

இவர்களை தவிர ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் என பெரிய பட்டாளமே இருந்தாலும், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா நடிப்பு தனித்து நிற்கின்றது. கேங்ஸ்டர் கதை தளபதி, நாயகனுக்கு பிறகு மணிரத்னம் தொட்டு இருக்கு களம்.

ஆனால், இன்றும், தன் இடம் தனக்கு தான் என நிரூபிக்கின்றார், ‘இதெல்லாம் எதுக்கு சொடக்கு போட்டால் இந்த உயிர் இப்படி போய்டும், நீ நான், நாளைக்கு பிறக்க போறவன் வரைக்கும் சைபர்’ தான் என வரும் வசனம் எல்லாம் ஆயிரம் அர்த்தம்.

படத்தின் ஐந்தாவது ஹீரோ ரகுமான் தான், பாடல்கள் மாண்டேஜாக வந்தாலும், பின்னணியில் படத்தை தூக்கி வேற லெவலுக்கு கொண்டு செல்கின்றார். அதேபோல் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு பல இடங்களை மிக அழகாக படம்பிடித்து காட்டியுள்ளது.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை, இத்தனை கதாபாத்திரத்தை வைத்து அதை அழகாக கொண்டு சென்றவிதம்.

நடிகர், நடிகைகள் நடிப்பு, முடிந்தளவு எல்லோரும் ஸ்கோர் செய்துள்ளது.

கிளைமேக்ஸ் டுவிஸ்ட் ட்ரைலரை பார்த்து அப்படியே படம் செல்கின்றது என்று நினைக்கும் தருணத்தில் தடுமாறும் கிளைமேக்ஸ்.

படத்தின் இசை, ஒளிப்பதிவு என டெக்னிக்கல் விஷயங்கள்.

பல்ப்ஸ்

மணிரத்னம் படத்திற்கே உண்டான கொஞ்சம் அதுவும் இரண்டாம் பாதியில் மெதுவாக நகரும் சில காட்சிகள் (ஆனால், கதைக்கு அதுவும் தேவை தானே).
ஐஸ்வர்யா ராஜேஸ், அதிதிராவ் இவர்கள் எல்லாம் நட்சத்திர

அந்தஸ்திற்காகவே தவிர பெரிதும் கவரவில்லை.

மொத்தத்தில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மணிரத்னம் இஸ் பேக்.



 

 


 


 


 

Monday, September 24, 2018

கடைசி வாரம் பிக்பாஸ் ஒளிப்பரப்புவதில் சிக்கல்! என்ன செய்ய இருக்கிறது நிர்வாகம்

கடைசி வாரம் பிக்பாஸ் ஒளிப்பரப்புவதில் சிக்கல்! என்ன செய்ய இருக்கிறது நிர்வாகம்

பிக்பாஸ் தமிழ், தமிழகத்தில் அதிகமானோரால் பார்க்கப்படும் நிகழ்ச்சி. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இதில் ஆரம்பத்தில் 16 பேர் கலந்து கொண்டனர்.
தற்போது 4 பேர் மட்டுமே உள்ளதால் எல்லாருடைய கவனமும் சற்று அதிகமாகியுள்ளது. இதனால் இந்த வாரம் பல சுவாரஸ்சியங்கள் நடைபெற இருக்கின்றன.
இந்நிலையில் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது அந்த நேரத்தில் அரண்மனை கிளி என்ற மற்றொரு சீரியல் ஒளிபரப்பப்பட உள்ளதால் பிக்பாஸ் ஒளிபரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த நிகழ்ச்சியின் நேரம் 9.30 to 11 என மாற்றப்பட்டாலும் 10.30க்கு சின்னதம்பி சீரியல் ஒளிப்பரப்பபடுகிறது. எனவே இந்த நிகழ்ச்சியின் நேரம் 1 மணிநேரமாகவோ அல்லது சின்னதம்பியின் நேரம் மாற்றவோ படலாம்.

 

VARMA Official Teaser | Bala | Dhruv Vikram | E4 Entertainment | Tamil

VARMA Official Teaser | Bala | Dhruv Vikram | E4 Entertainment | Tamil

 

Saturday, September 22, 2018

சாமி ஸ்கொயர் திரை விமர்சனம்

சாமி ஸ்கொயர் திரை விமர்சனம்

சாமியின் வேட்டை தொடரும் என்று 15 வருடங்களுக்கு முன்பே இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து முடித்தவர் ஹரி. அதே எனர்ஜியில் 15 வருடம் கழித்து சாமி வேட்டையை தொடர, இந்த டிஜிட்டல் உலகில் ஏற்கனவே பல ட்ரோல், கிண்டல்களை தாண்டி சாமி-2 ஜெயித்ததா? இல்லை ட்ரோல் கண்டண்ட் ஆனதா? பார்ப்போம்.

கதைக்களம்

சாமி முதல் பாகத்தில் பெருமாள் பிச்சையை கொல்வதோடு படம் ஆரம்பிக்கின்றது. அதை தொடர்ந்து 28 வருடங்களுக்கு பிறகு அவருடைய மகன் ராம் சாமி(விக்ரம்) டெல்லியில் ஐ ஏ எஸ் படிக்கின்றார்.
அந்த இடைப்பட்ட கேப்பில் பெருமாள் பிச்சை மகன் ராவண பிச்சை(பாபி சிம்ஹா) திருநெல்வேலியை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வருகின்றார்.
ஆனால் அப்பா இரத்தம் தானே மகனுக்கு ஓடுகிறது அல்லவா, அதனால் ராம் சாமி ஐ ஏ எஸ்ஸை விட்டு ஐபிஎஸ் எடுக்கின்றார்.
பிறகு என்ன திருநெல்வேலி சென்று ராம் சாமி எப்படி ராவண பிச்சையை வேட்டையாடுகின்றார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விக்ரம் நீண்ட நாட்களாக ஒரு கமர்ஷியல் வெற்றிக்காக காத்திருக்கின்றார். அந்த வெற்றி சாமி-2வில் அவருக்கு கிடைக்க வாய்ப்புக்கள் அதிகம், அதற்கான வேலைகளை அவர் முடிந்த அளவு செய்தும் உள்ளார். ஆறுச்சாமி மகன் ராம் சாமி கேட்க கொஞ்சம் காமெடியாக இருந்தாலும் கதையோடு ஹரி எப்படியோ கோர்த்து கொண்டு வந்துவிட்டார். அதிலும் அப்பாவை போல் ஒருசாமி, இரண்டு சாமி வசனம் பேசும் போது தியேட்டரே அதிர்கின்றது.
இந்த படத்திற்கு ஏன் பாபி சிம்ஹா என்று தான் இவரை கமிட் செய்யும் போது ஒரு குரல் வந்தது. ஆனால், அவரும் கலக்கியுள்ளார் தன் கதாபாத்திரத்தில். இதை தவிர சூரி, கீர்த்தி சுரேஷ் காம்போ நம் பொறுமையை மிகவும் சோதிக்கின்றது, அதிலும் சூரி காமெடி முடியல ஹரி சார்.
த்ரிஷாவிற்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஸ் என்று காட்டும் போதே ரசிகர்களிடம் வருத்தம் தான் மிஞ்சி நிற்கின்றது. படத்தின் முதல் பாதி ஹரி படம் தானா என்பது போல் நகர்கின்றது, இடைவேளையில் ராம் சாமி திருநெல்வேலிக்குள் வரும் போது படம் சூடுப்பிடிக்கின்றது.
அதன் பிறகு கிளைமேக்ஸ் வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லை, இடையில் கீர்த்தி, சூரியை மறந்தால். ஹரி சார் உங்களிடம் யாரோ வேகவேகமாக படம் எடுத்தால் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வருவார்கள் என்று சொல்லி ஏமாற்றியுள்ளார்கள் போல.
சிங்கம், சாமியின் மிகப்பெரும் வெற்றிக்கு துரை சிங்கம், ஆறுச்சாமியின் நிதானமும் அழுத்தமான கதையும் தான் காரணம். அந்த ரூட்டிற்கு வாங்க சார், த்ரிஷா இல்லாதது எத்தனை சோகமோ, அதேபோல் DSP-யின் இசை. சோதிக்கின்றார், குறிப்பாக பாடல்களில்.
ஹாரிஸ் இசை வரும் போது மட்டுமே திரையரங்கு அதிர்கின்றது. ஒளிப்பதிவு கிளைமேக்ஸில் ராஜஸ்தான் மண் நம் மீது விழுகின்றது, அத்தனை ஸ்பீட்.

க்ளாப்ஸ்

விக்ரம் ஒன் மேன் ஷோ மற்றும் பாபி சிம்ஹாவின் வில்லத்தனம்.

படத்தின் இரண்டாம் பாதியின் பரபரப்பு

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி மற்றும் சூரி காமெடி, கீர்த்தி சுரேஷ் படு செயற்கையான நடிப்பு.
மொத்தத்தில் சாமியை மிஞ்சவில்லை என்றாலும் சமாளித்து கரை சேர்ந்துள்ளது இந்த சாமி-2



 


 

 


 


 

ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்

ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்

பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவில் சில சிறு பட்ஜெட் படங்கள் களத்தில் இறங்கத்தான் செய்கின்றன. அதிலும் நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுவது நிச்சயம். அந்த வகையில் ராஜா ரங்குஸ்கி என பெயர் தாங்கி வந்துள்ள படம் ராஜா போல நின்று விளையாடுமா என பார்க்கலாம்.

கதைக்களம்

ஊரில் போலிஸ் இளைஞனாக கதையின் ஹீரோ சிரிஷ். இவருக்கு பெரிதாக குடும்ப பின்னணியெல்லாம் இல்லை. வழக்கம் போல தன் காவல் ரோந்து பணிகளை செய்து வருகிறார். அவருக்கு நண்பனாக சக போலிஸ் தோழன் கல்லூரி வினோத் மட்டுமே.
இடையில் ஹீரோயின் சாந்தினியை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். எழுத்துதுறையில் ஆர்வலராக இருக்கும் இவருக்கென ஒரு தனி பாலிசி. ஒரு நாள் அவர் குடியிருப்பில் பெண் ஒருவர் கொல்லப்படுகிறார். ரோந்து பணிக்காக சென்ற ஹீரோ இதை கண்டு அதிர்ச்சியாகிறார்.
தொடர்ந்து அடுத்தடுத்த கொலைகள். சம்மந்தமில்லாமல் இவர் இக்குற்ற வழக்கில் சிக்க, நடப்பது என்ன? பின்னணியில் இருப்பது யார்? என புரியாத புதிராக நகர்வது தான் ராஜா ரங்குஸ்கி.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ சிரிஷ் மெட்ரோ படத்தை தொடர்ந்து 2 வது படமாக இந்த ஆக்‌ஷன் கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். கதையில் இவர் தான் ராஜா. ஒரு சாதாரண போலிஸ் காவலர். காதல் ஒரு பக்கம். பழி மறுபக்கம் என அமைதியற்று அலைகிறார். பொருத்தமான கதையை தான் அவர் தேர்வு செய்திருக்கிறார். அவர் முன்பு நேர்காணல்களில் சொன்னது போல இப்படம் பலருக்கும் பிடிக்கும்.
ஹீரோயின் சாந்தினி பல படங்களில் நடித்த அனுபவத்தை காட்டியுள்ளார். ரங்குஸ்கியாக அவர் கேரக்டரில் இருந்தாலும் ஹீரோவுக்கு நிகரான இடம் இங்கே அவருக்கு என சொல்லலாம். கிட்டத்தட்ட ஒரு ஹீரோயினை மையப்படுத்திய கதை போல என்றால் மிகையல்ல.
இயக்குனர் தரணி தரண் ஜாக்சன் துரை படத்தை கொடுத்து மற்ற படங்களுக்கு மத்தியில் இடம் பிடித்தது போல இப்படத்திலும் அவர் பிடித்து வைத்திருக்கிறார். முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் நம் கவனத்தை அதிகப்படுத்தியுள்ளார்.
கல்லூரி வினோத் இப்படத்தில் ஒரு சப்போட்டிங் ரோல் என்றாலும் சில இடங்கள் அடிக்கும் காமெடிகள் படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் புத்துணர்வு கொடுக்கிறார். வாழ்த்துக்கள்.
சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்திற்குள் வரும்படியான காட்சி நகர்வுகளை பார்க்கும் போது பல படங்களை பார்த்து பழகியவர்களுக்கு கொஞ்சம் Uneasy போல தான். ஆனாலும் சம்திங் மிஸ்ஸிங் என சொல்லவைக்கும். அதனால் ஒளிப்பதிவாளருக்கும் இதில் பங்குண்டு.
இசைக்கு யுவன். நாம் சொல்லவா வேண்டும். இந்த படத்திற்கு அவர் பெரிதளவில் சம்பளம் வாங்கவில்லை என்றாலும் தனக்காக இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்து வைத்துள்ளதோடு, அவர்களின் எதிர்பார்ப்பை இங்கேயும் நிறைவேற்றியுள்ளார். சிம்பு இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இதுமட்டுமல்ல. படத்தில் நாம் எதிர்பாராத விசயங்களும் உண்டு. அதை நாங்கள் இங்கே சொல்லப்போவதில்லை

கிளாப்ஸ்

படத்தில் கதை நகர்வு சலிப்படையாமல் நம்மை இழுத்து செல்வது தான்.
இயல்பான காமெடிகள் காமெடி நடிகர்கள் இல்லை என்ற குறையை மூடிவிட்டது.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கதைக்கு பக்க பலம்.
எதிர்பாராத கிளைமாக்ஸ் Interesting Segment

பல்ப்ஸ் 

ஹீரோ இன்னும் கொஞ்சம் எக்ஸ்பிரஷன்களை கூட்டியிருக்கலாம்.
பாடல்கள் மனதில் இடம் பெறுவது கொஞ்சம் கேள்வியாக தான் இருக்கிறது.

மொத்தத்தில் ராஜா ரங்குஸ்கி ஒரு புதிரான விளையாட்டு. தியேட்டரில் பாருங்கள் மக்களே...



 


 


 


 

யூ டர்ன் விமர்சனம்

யூ டர்ன் விமர்சனம்

தமிழ் சினிமாவில் தற்போது நாயகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது.

நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா வரிசையில் சமந்தா களமிறங்கியிருக்கும் படம் தான் யூ டர்ன்.

கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான இப்படத்தை அப்படத்தின் இயக்குனரான பவன் குமாரே தமிழ், தெலுங்கிலும் இயக்கியுள்ளார்.

இவர் ஏற்கனவே லூசியா என்ற படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இப்படமும் தமிழில் எனக்குள் ஒருவன் என்றபெயரில் வெளியானது.

தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்துவரும் சமந்தாவுக்கு இப்படமும் வெற்றி கொடுத்ததா பார்ப்போம்.

கதைக்களம்

சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் தொடர்ந்து பல கொலைகள் நடக்கிறது. இதை பற்றி தொடர்ந்து பத்திரிக்கையாளரான சமந்தா எழுதி வருகிறார்.

இதனால் இவரின் மீது போலிஸ்க்கு சந்தேகப்பார்வை விழுகிறது. போலிசாக ஆதி நடித்துள்ளார்.

இதன் பின் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் சமந்தா. கடைசியில் அந்த விபத்துக்கான காரணம் என்ன? மரணம் தடுக்கப்பட்டதா? சமந்தா பிரச்சனையிலிருந்து தப்பித்ததா என்பதே மீதி கதை.

பல முடிச்சுகளுடன் சுவாரஸ்யமாக செல்லும் இப்படத்தில் கமெர்ஷியலுக்காக பாடல்கள் என எதையும் சேர்க்கவில்லை.

படத்தை அதிகம் இழுக்காமல் 2 மணிநேரத்தில் முடித்துள்ளனர். யூகிக்க முடியாத பல காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

படத்தில் சமந்தா, ஆதியைப்போல மற்ற கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், ராகுல் ரவீந்திரன், பூமிகா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பூர்ணசந்திர தேஜஸ்வியின் பின்னணி இசையில் திரில்லரை மெயிண்டெயின் பண்ணியுள்ளார். ஓளிப்பதிவுக்காக மெனக்கெட்டிருக்கிறார் நிகித் பொம்மிரெட்டி.

க்ளாப்ஸ்

சமந்தா உள்ளிட்ட மற்ற நடிகர்களின் நடிப்பு

வலுவான திரைக்கதை, யூகிக்க முடியாத முதல்பாதி காட்சிகள்

பல்ப்ஸ்

இரு மொழிகளில் தயாரானதால் பல இடங்களில் டப்பிங் செட் ஆகவில்லை.

சில இடங்களில் வரும் நாடகத்தன்மையான வசனங்கள்

மொத்தத்தில் வழக்கமான மசாலா படங்களில் இருந்து தப்பித்து புதிய அனுபவத்தை பெற ஒரு யூ டர்ன் அடித்து வரலாம்.




 


 

 

 


 

சீமராஜா திரை விமர்சனம்

சீமராஜா திரை விமர்சனம்

 

தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே தொட்டதெல்லாம் வெற்றியாகும். அப்படி தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வரும் சிவகார்த்திகேயன், ஹாட்ரிக் கூட்டணியாக பொன்ராமுடன் சீமராஜாவை களத்தில் இறக்கியுள்ளார், இந்த படமும் சிவகார்த்திகேயனின் வெற்றி மகுடத்தில் இணைந்ததா? பார்ப்போம்

கதைக்களம்

ராஜா வம்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் வழக்கம் போல் வேலை இல்லாமல் சுற்றினாலும் ஊரே மதிக்கின்றது. அவரும் பல நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்கின்றார், அப்போது சமந்தாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றார்.
அதை தொடர்ந்து சமந்தா புலியம்பட்டியை சார்ந்தவர், சிவகார்த்திகேயன் சிங்கம்பட்டியை சார்ந்தவர் இந்த இரண்டு ஊருக்கும் ஒரு மார்க்கெட் தான் பஞ்சாயத்து. அது மட்டுமின்றி சில விவசாய நிலங்களை லால் மிரட்டி பறித்துள்ளார்.
முதலில் மார்கெட்டை அடைய லால்,சிம்ரனும் மற்றும் சிவகார்த்திகேயனும் மோத யாருக்கு மார்க்கெட் என்பதற்காக ஒரு மல்யுத்த போட்டி நடக்கின்றது.
அதில் சிவகார்த்திகேயன் வெற்றிபெற பிறகு தான் தெரிய வருகின்றது சமந்தா லாலின் முதல் மனைவி மகள் என்பது. பிறகு என்ன இவர்கள் காதல் இணைந்ததா? சீமராஜா, லாலின் அதிகாரத்தை அடக்கினாரா? மக்களின் நிலத்தை மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சீமராஜாவாக சிவகார்த்திகேயன் தன்னால் எவ்வளவு உழைப்பை கொடுக்க முடியுமோ, அதாவது காமெடி, ஆடல், பாடல் தாண்டி ராஜா வேஷத்திலும் மிரட்டியுள்ளார், ஒரு முழு கமர்ஷியல் ஹீரோவாகவே மாறிவிட்டார், மாஸ் இண்ட்ரோ, பன்ச் வசனம் என ரஜினி, விஜய்க்கு அடுத்த இடத்தை இப்போது பிடிக்க ரெடியாகிவிட்டார், இதில் அரசியலுக்கு போய்டலாம் வா என்று சூரி சிவகார்த்திகேயனை கூப்பிடுவது போல கூட வசனம் உள்ளது, சரி ஏதோ ப்ளானில் இருக்கிறார் SK.
படத்தின் மிகப்பெரும் பலம் எல்லோரும் எதிர்ப்பார்த்த சிவகார்த்திகேயன், சூரி காம்போ தான், ஒரு இடத்தில் கூட நம்மை ஏமாற்றவில்லை, காமெடியில் அசத்துகின்றனர், அதிலும் சிறுத்தையிடம் மாட்டிக்கொண்டு சூரி அடிக்கும் கலாட்டா, இப்போது எல்லாம் படம் பார்க்க தானே லாப்டாப் வச்சுருக்காங்க என கொடுக்கும் கவுண்டர் என எப்போதும் போல் இந்த கூட்டணி பாஸ்மார்க்.
இதை தவிர படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை, சிம்ரனுக்கும் அவருடைய டப்பிங் குரலுக்கும் கொஞ்சம் கூட மேட்ச் ஆகவில்லை, சமந்தா படத்தில் கொடுக்கும் ரியாக்ஸனை விரல் விட்டு எண்ணிவிடலாம், சிறுத்தை வந்தால் கூட நிதானமாக ‘சிறுத்தை வந்துடுச்சுனு’ ரியாக்ஸன் காட்டாமல் நிற்கின்றார்.
லால், நெப்போலியன் என பலரும் ஏமாற்றமே, காமெடியா, கதையா என்ற இடத்தில் பொன்ராம் மிகவும் தடுமாறியுள்ளார், காமெடியை வைத்து கதையை நகர்த்திய முதல் பாதி ஓரளவிற்கு ஓகே என்றாலும், இரண்டாம் பாதி தொடங்கியதுமே ராஜா கதைக்கு சென்று, சிவகார்த்திகேயன் களத்தில் இறங்கியிருந்தால் சூடுப்பிடித்திருக்கும்.
ஆனால், படம் எப்போது முடியும் என்ற மனநிலையில் ராஜா கதை வருகின்றது, சிஜி வேலைகள் உண்மையாகவே சூப்பர், இந்த பட்ஜெட்டில் மிரட்டியுள்ளனர், அப்படியிருந்தும் அந்த காட்சிகள் வந்த இடம் தான் கொஞ்சம் பொறுமையை சோதித்தது.
டி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே, ஆனால் பின்னணி ஏன் சார் இவ்வளவு ரிப்பீட் டியூன்ஸ், ஒளிப்பதிவு கலக்கல், அதிலும் ராஜா போஷன் சூப்பர்.

க்ளாப்ஸ்

படத்தின் முதல் பாதி.

சிவகார்த்திகேயன், சூரி காம்போ சிரிப்பிற்கு கேரண்டி

பல்ப்ஸ்

வலுவே இல்லாத திரைக்கதை, அதிலும் இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கின்றது.

நெகட்டிவ் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம், கடைசி வரை எந்த ஒரு இடத்திலும் நமக்கு அவர்களை வில்லனாக பார்க்க முடியவில்லை.

மொத்தத்தில் ராஜா பேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்தி திருப்திப்படுத்துகின்றார்


 

 


 


 


 

வஞ்சகர் உலகம் திரை விமர்சனம்

வஞ்சகர் உலகம் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் என்றாவது தான் வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட படம் வரும். அப்படி தொடர்ந்து அறிமுக இயக்குனர்கள் சிலர் தரமான முயற்சிகளை சினிமாவில் எடுத்து வருகின்றனர், அந்த வகையில் அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் வஞ்சகர் உலகம், இவை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே சாந்தனி கொலை செய்யப்படுகின்றார். இதை தொடர்ந்து அந்த கொலையை யார் செய்தார்கள் என்று போலிஸ் தேட ஆரம்பிக்கின்றது.
அதே நேரத்தில் பத்திரிகை துறையிலிருந்து இந்த கொலை குறித்து பெரிய விவாதம் நடந்து வருகின்றது, இந்த கொலையை யார் செய்தார்கள் என்று இரண்டு தரப்பும் மும்மரமாக தேட, அந்த கொலையை ஒருவர் செய்ததாக தெரிய வருகின்றது. அதோடு படத்தின் இடைவேளை.
இதற்கிடையில் ஒரு கேங்ஸ்டர் ஹெட் துரைராஜ் என்பவரை போலிஸ் தேட, அந்த குருப்பில் குருசோமசுந்தரம் இருக்க, இந்த இரண்டு கதைகளும் எப்படி ஒரு புள்ளியில் சந்திக்கின்றது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

குருசோமசுந்தரம் இவரை வாழ்த்த வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், முதல் பாதியில் இவர் எதற்கு இந்த படத்தில் என்று நம்மை எண்ண வைத்து, இரண்டாம் பாதியில் மிரட்டி விடுகின்றார், அதிலும் திரையரங்கில் ஒரு காட்சி குரு எவ்வளவு பெரிய நடிகர் என்பதை நிரூபித்துவிடுகின்றார்.
அதை தொடர்ந்து சிபி கதாபாத்திரம் கவனிக்க வைக்கின்றது, முதல் படம் போலவே இல்லை, இப்படி ஒரு புதிய முயற்சி கொண்ட படத்தில் ஏன் அத்தனை செயற்கை தனமான பத்திரிகையாளர்கள், எந்த ஒரு இடத்திலும் டப்பிங் மேட்ச் ஆகவே இல்லை.
படத்தில் பலரும் பேசத்தயங்கும் சில விஷயங்களை இயக்குனர் மனோஜ் தைரியமாக பேசியுள்ளார், இவை கதைக்கு மிக முக்கியம் என்பதால் அதை சொல்ல முடியவில்லை, படத்தின் முதல் பாதி ஆரம்பித்த 10 நிமிடம் விறுவிறுப்பாக செல்ல அடுத்து இடைவேளை வரை நம் பொறுமையை மிகவும் சோதிக்கின்றது.
இரண்டாம் பாதி கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது, கேங்ஸ்டர் என்று ஒரு கதை தனியாக வர, அதில் குருசோமசுந்தரமே செம்ம ஸ்கோர் செய்கின்றார், அதிலும் அவர் கேங்ஸ்டராக மெல்ல வளர்ந்து வருவது போல் காட்டும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது, தென்னிந்தியாவின் நவாஸுதின் சித்திக் என்றே இவரை சொல்லலாம்.
டெக்னிக்கல் விஷயங்கள் படத்தின் மிகப்பெரிய பலம் அதிலும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு ஏற்றவாறு கலர் தேர்ந்தெடுத்தது புதிய முயற்சி, இவர்கள் எல்லோரையும் விட படத்தின் மறைமுக ஹீரோ இசையமைப்பாளர் சாம் தான், இவரின் பெஸ்ட் என்றே இதை சொல்லலாம்.

க்ளாப்ஸ்

குருசோமசுந்தரம் படத்தை ஒன் மேனாக தாங்கி செல்கின்றார்.

டெக்னிக்கல் விஷயங்கள் ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சூப்பர்.

கிளைமேக்ஸ் டுவிஸ்ட் ஒவ்வொன்றாக தெரியும் காட்சி புதிய அனுபவத்தை தருகின்றது.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி மிக மெதுவாக நகரும் திரைக்கதை.
ஒரு சிலர் குறிப்பாக அந்த பத்திரிகையாளரின் நடிப்பு மிக செயற்கைத்தனமாக உள்ளது.
ஜென்ரல் ஆடியன்ஸிற்கு படம் எளிதில் புரியுமா? என்று தெரியவில்லை.
மொத்தத்தில் புதிய முயற்சியை விரும்புவோர்கள், கண்டிப்பாக வஞ்சகர் உலகத்திற்கு விசிட் அடிக்கலாம். மற்றவர்களுக்கு?.


 

 





 


 

 

NOTA OFFICIAL TRAILER - TAMIL | Vijay Deverakonda | Anand Shankar

NOTA OFFICIAL TRAILER - TAMIL | Vijay Deverakonda | Anand Shankar

Friday, September 21, 2018

2.0 - Official Teaser [Tamil] | Rajinikanth | Akshay Kumar | A R Rahman | Shankar | Subaskaran

2.0 - Official Teaser [Tamil] | Rajinikanth | Akshay Kumar | A R Rahman | Shankar | Subaskaran

 

 

Wednesday, September 5, 2018

ஒரு படம் இத்தனை மடங்கு லாபம் தருமா? கீதா கோவிந்தம் வசூலில் ஒரு மைல் கல்

ஒரு படம் இத்தனை மடங்கு லாபம் தருமா? கீதா கோவிந்தம் வசூலில் ஒரு மைல் கல்

விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவின் மாற்றத்திற்கான நடிகர் என்று சொல்லலாம். வேறு எந்த ஒரு நடிகருக்கும் மூன்றே படங்களில் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்குமா? என்றால் சந்தேகம் தான்.
இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் கீதா கோவிந்தம். இப்படம் தமிழகத்திலேயே ரூ 5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதுவரை வந்த நேரடி தெலுங்குப்படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்தது இந்த படம் தான்.
மேலும், கீதா கோவிந்தம் உலகம் முழுவதும் ரூ 15 கோடிக்கு படத்தை விற்றுள்ளனர், ஆனால், நிசாம் பகுதியில் மட்டுமே ரூ 15 கோடி ஷேர் வந்துள்ளதாம்.
உலகம் முழுவதும் ரூ 60 கோடி ஷேர் வரை, விற்றதை விட 3 மடங்கு அதிக லாபம் 3 வாரத்தில் வந்துள்ளதாம்.

 

ரசிகர்களின் ஆல்டைம் பேவரட் படம் எது? சிறப்பு கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

ரசிகர்களின் ஆல்டைம் பேவரட் படம் எது? சிறப்பு கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

 

நடிகர் நாசருக்கு இவ்வளவு அழகாக ஒரு மகன் இருக்கின்றாரா! முதன் முதலாக திரைத்துறையில் எண்ட்ரீ, நீங்களே பாருங்கள்

நடிகர் நாசருக்கு இவ்வளவு அழகாக ஒரு மகன் இருக்கின்றாரா! முதன் முதலாக திரைத்துறையில் எண்ட்ரீ, நீங்களே பாருங்கள்

நாசர் தமிழில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை, ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து பெயர் பெற்றவர்.
இவருடைய மகன் Luthfudeen ஏற்கனவே சைவம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார், இதை தொடர்ந்து நாசரின் மூன்றாவது மகனும் சினிமாவில் களம் இறங்கவுள்ளார்.
ஆம், அவரின் மூன்றாவது மகன் அபிஹாசன், கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை தூங்காவனம் ராஜேஸ் இயக்க, விக்ரம் நடிக்கின்றார்.
இன்று அபிஹாசனின் பிறந்தநாளும் கூட, பலரும் இவருடைய புகைப்படத்தை ஷேர் செய்ய, அட நாசர் மகன் செம்ம ஹாண்ட்சமாக இருக்கிறாரே என்று அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். இதோ...


 

Sunday, September 2, 2018

‘ஓலக் குடிசையில கனவு கண்டாளே..’ அனிதாவுக்கு பாடல் மூலம் இசையமைப்பாளர் ஜஃபி அஞ்சலி!

‘ஓலக் குடிசையில கனவு கண்டாளே..’ அனிதாவுக்கு பாடல் மூலம் இசையமைப்பாளர் ஜஃபி அஞ்சலி!

சென்னை: அனிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளர் ஜஃபி இசையில் ஒரு வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு இதே நாளில் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் மாணவி அனிதாவின் மரணம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 

இந்நிலையில், மாணவி அனிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனிதாவின் சொந்த ஊர் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்ச்சி, அனிதாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா மற்றும் அனிதா நினைவு அறக்கட்டளை துவக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளர் ஜஃபி, அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 'மகராசி' என்ற பாடல் ஒன்றை இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

ஓலக் குடிசையில கனவு கண்டாளே..' எனத் தொடங்கும் அந்தப் பாடல் நெஞ்சை உருக்குவதாக உள்ளது


Saturday, September 1, 2018

Sandakozhi 2 Official Trailer | Vishal, Keerthi Suresh, Varalaxmi | Yuvanshankar Raja | Lingusamy

Sandakozhi 2 Official Trailer | Vishal, Keerthi Suresh, Varalaxmi | Yuvanshankar Raja | Lingusamy

 

கீதா கோவிந்தம் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு வசூலா? தமிழ் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய்

கீதா கோவிந்தம் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு வசூலா? தமிழ் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய்

சமீபத்தில் மிக சென்சேஷனல் ஆன நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்துள்ள கீதா கோவிந்தம் படம் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது.

தெலுங்கு பேசும் மாநிலங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 5 கோடி வசூல் ஈட்டி பாகுபலிக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 

மொத்த வசூல் 100 கோடியை தாண்டிவிட்ட நிலையில் இதற்காக விஜய் தேவரகொண்டா ட்விட்டரில் தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

 

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை வச்சு.. அனுராக் காஷ்யபுக்கு வந்த ஆசையப் பாருங்கl

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை வச்சு.. அனுராக் காஷ்யபுக்கு வந்த ஆசையப் பாருங்கl

சென்னை: இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் வில்லனாகத் தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகமான பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்விற்கு தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை இணைத்து ஒரு படம் பண்ண வேண்டுமென்று ஆசையாம். 
 
இந்த வாரம் திரைக்குவந்த நயன்தாரா மற்றும் அதர்வா நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்தின் வில்லன் அனுராக் காஷ்யப் ஒரு பாலிவுட் இயக்குநர். அவர் இமைக்கா நொடிகள் படத்தில் தனது நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.


இந்தப் படத்தில் வில்லனாகத் தனது நடிப்பை கதாப்பாத்திரத்திற்கு தகுந்த அளவிற்குக் கொடுத்து சிறந்த நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். இதனால் இவர் பல தமிழ்ப் படங்களில் வில்லனாக வலம் வருவார் என்று அனைவரும் கூறுகின்றனர்.

இந்தப் படத்திற்காக சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், தனக்குத் தமிழ் படம் ஒன்று இயக்கவேண்டும் என்றும் அதிலும் நடிகர் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை இணைத்து அந்தப் படத்தை உருவாக்கவேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்று கூறினார்.

அந்தப் படத்திற்காக இருவருக்கும் தகுந்தது போல கதாப்பாத்திரம் கொண்ட ஒரு கதையை உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அவர்கள் சம்மதித்தால் படத்தின் அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் கூறினார்.
 
உங்களுக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் அந்த ஆசை இருக்கிறது.



‘அரசன்’ பட விவகாரம்.. ரூ. 85 லட்சத்தை தராவிட்டால் சிம்புவின் கார், மொபைலை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு

‘அரசன்’ பட விவகாரம்.. ரூ. 85 லட்சத்தை தராவிட்டால் சிம்புவின் கார், மொபைலை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு

சென்னை: அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் சிம்பு ரூ.85 லட்சத்தை திருப்பி கொடுக்காவிட்டால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் என்ற சினிமா படத் தயாரிப்பு நிறுவனம், நடிகர் சிம்பு மீது சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது. அதில், நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து 'அரசன்' படத்தை தயாரிக்க திட்டமிட்டதாகவும், இதற்காக அவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் பேசி, முன்பணமாக ரூ.50 லட்சத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி வழங்கியதாகவும் கூறியிருந்தனர். மேலும். தங்களுடன் செய்து ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு 'அரசன்' படத்தில் நடிக்க முன்வராமல் இழுத்தடித்தாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

கோரிக்கை:

இதனால், தங்கள் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர சட்டப்படி உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 வட்டியுடன் சேர்த்து:

இந்த மனு நீதிபதி மெ.கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்பு நடிகர் சிம்பு ‘அரசன்' படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ.50 லட்சத்தை ரூ.35.50 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.85.50 லட்சம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

 ஜப்தி செய்ய உத்தரவு: 

அதோடு, இந்த தொகையை 4 வாரத்தில் அவர் செலுத்த வேண்டும். இல்லையெனில் நடிகர் சிம்பு வீட்டில் உள்ள வீட்டு உபயோக பொருட்களான ரெப்ரிஜிரேட்டர், டி.வி., வாஷிங்மெஷின், கட்டில், ஷோபா செட், மின் விசிறிகள், கிரைண்டர், மிக்ஸி, ஏர்கண்டி‌ஷனர், டைனிங் டேபிள், சேர்கள் மற்றும் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஜப்தி செய்யலாம் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

 நீதிபதி மறுப்பு:

முன்னதாக இது தொடர்பான சிம்பு தரப்பு வாதத்தில், "குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு தொடங்காததால் தனக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அட்வான்ஸ் தொகையை திருப்பித்தர இயலவில்லை என்றும் வாதாடப்பட்டது. அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது



 


ஒரு வருடம் டைம் எடுத்து அதை ஆராய்ந்த ஸ்ருதி ஹாசன்!

ஒரு வருடம் டைம் எடுத்து அதை ஆராய்ந்த ஸ்ருதி ஹாசன்!

சென்னை: ஒரு ஆண்டு காலம் அவகாசம் எடுத்துக் கொண்டு தன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைச் சோதித்து பார்த்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழ் திரையுலகின் ஜாம்பவான் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தமிழில் முதல் முதலாக ஏழாம் அறிவு மூலம் அடியெடுத்து வைத்தார். இவர் திரையுலகிற்கு வந்தவுடனே இவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்தனர்.

 மேலும் இவர் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய எல்லா மொழிகளிலும் வரிசையாகப் படங்கள் நடித்து பெரும் புகழைப் பெற்றார், மேலும் எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக இவரை எந்தத் திரைப்படத்திலும் காண முடியவில்லை, ஏன் இந்த இடைவெளி? இவர் திருமணம் பண்ணும் முடிவு எதாவது எடுத்திருக்கிறாரா என்று பல வதந்திகள் வரத் தொடங்கின, இந்நிலையில் ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஸ்ருதிஹாசன். அப்போது தனக்கு தன்னை பற்றி சுயமாகப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது, என்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவே நான் இந்த இடைவெளியை எடுத்துக்கொண்டேன். தற்போது தனக்கு தன்னை பற்றி ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. இனி வரும் காலங்களில் தன் படங்களை பார்க்க முடியும் என்று கூறினார். அது மட்டும் அல்ல தன் தாய் சரிகாவுடன் இணைந்து மிக விரைவில் ஒரு படம் பண்ணப் போவதாகவும் கூறினார்.


அரசியலா ஆளவிடுங்க சாமி.. பதறி ஓடும் நடிகை ஸ்ரேயா

அரசியலா ஆளவிடுங்க சாமி.. பதறி ஓடும் நடிகை ஸ்ரேயா 

சென்னை: சிவாஜி புகழ் நடிகை ஸ்ரேயா அரசியலுக்குத் தான் வருவது சாத்தியமற்றது என்று நெற்றியில் அடித்ததுபோல பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். சமீபகாலமாகத் தமிழ் படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நடிகை ஸ்ரேயா நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் அரவிந்த் சாமி நாயகனாக நடிக்கும் "நரகாசுரன்" திரைப்படம் மூலம் மீண்டும் தமிழில் அடியெடுத்து வைக்கின்றார். இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் இந்தப் படத்தை, பத்ரி கஸ்தூரி தயாரித்துள்ளார்.
 

 

இந்நிலையில் இந்தப் படம் குறித்துப் பேச சென்னையில் பத்திரிகையாளர்களை ஸ்ரேயா சந்தித்தபோது, நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் வருவது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும், தான் இதுவரை நடித்த படத்தில் தன் மனதிற்கு நெருக்கமான படம் சிவாஜி என்றும், அதில் ரஜினிகாந்துடன் நடித்தது தனது பாக்கியம் என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் ரஜினிகாந்த் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் சரிசமமாக பார்க்கக் கூடிய மனிதநேயம் மிக்க ஒரு நல்ல மனிதர் என்றும் அவரை போன்ற ஒரு மனிதரை நான் இதுவரை என் வாழ்நாளில் சந்தித்தது இல்லை என்றும் கூறினார். மேலும் நிறைய பேர் தன்னிடம் சினிமா நடிகைகள் விஜயசாந்தி, ஜெயப்பிரதா போன்றவர்கள் அரசியலுக்கு வந்துள்ளதைப் போல் நீங்களும் அரசியலில் ஈடுபடுவீர்களா? என்று கேட்கின்றனர், நான் அதற்குச் சரிவர மாட்டேன். அரசியலுக்கு வருவதற்கு நிறையத் தெரிந்திருக்க வேண்டும் தனக்கு அதற்குக் கொஞ்சம் கூடத் தகுதி இல்லை என்று அவர் கூறினார், மேலும் தனக்கு நடனத்தின் மீதுதான் ஆர்வம் அதிகம் அது சம்மந்தமான படங்களில் நடிப்பதுதான் தனக்குப் பொருத்தமாக இருக்கும், அது போன்ற வாய்ப்பிற்கு காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார் நடிகை ஸ்ரேயா.

60 வயது மாநிறம் திரை விமர்சனம்

60 வயது மாநிறம் திரை விமர்சனம்

 

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் ராதாமோகன். ஆனால், சமீபமாக இவர் ஒரு ஹிட் கொடுத்து ரீஎண்ட்ரி ஆக மிகவும் முயற்சி செய்து வருகின்றார். இப்படி ஒரு நிலைமையில் தான் சில வருடங்களாக விக்ரம் பிரபுவும் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள படமே 60 வயது மாநிறம், இவர்கள் இருவருக்கும் அந்த வெற்றி கிடைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

விக்ரம் பிரபு தன் அப்பா பிரகாஷ்ராஜை பார்க்க மும்பையில் இருந்து சென்னை வருகின்றார். பிரகாஷ்ராஜுக்கு தன்னையே யார் என்று தெரியாத அளவிற்கு மறதி உள்ளது.
அதை தொடர்ந்து ஹோமில் இருக்கும் தன் அப்பாவை துணி எடுக்க அழைத்து செல்கின்றார் விக்ரம் பிரபு. அப்போது தன் கவனக்குறைவால் அப்பாவை ஹோம் வாசலிலே மிஸ் செய்கின்றார்.
பிறகு தன் அப்பாவை தேடி தெரு தெருவாக விக்ரம் பிரபு அலைய, ஒரு போலிஸை கொலை செய்துவிட்டு வரும் சமுத்திரகனியிடம் பிரகாஷ்ராஜ் சிக்குகின்றார். சமுத்திரக்கனிக்கு எவிடன்ஸ் ஏதும் இருக்க கூடாது அதனால் பிரகாஷ்ராஜை கொலை செய் என பாஸிடம் இருந்து ஆர்டர் வருகின்றது.
இதை தொடர்ந்து விக்ரம் பிரபு தன் அப்பாவை கண்டுபிடித்தாரா, சமுத்திரக்கனி பிரகாஷ்ராஜை என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விக்ரபு பிரபு நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்கு போராடி வருகின்றார். இந்த படம் அவருக்கு ஹிட் கொடுக்குமா என்று தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக நல்ல பெயரை வாங்கி கொடுக்கும்.
பிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கின்றார், அனைத்தையும் மறந்து அவர் தன் மகன் பெயர் சிவா மட்டுமே நினைவில் வைத்து சிவா சாப்பிட்டாயா, சைக்கிள் ஓட்டினாயா என்று அவர் கேட்கும் இடம் கண் கலங்க வைக்கின்றது.
சமுத்திரக்கனி ஒரு கொலையை செய்துவிட்டு, அதை மறைக்க குமரவேல் குடும்பம், பிரகாஷ்ராஜ் ஏன் தன் கூடவே இருக்கும் பையனை கூட கொல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். ஆனால் அவர் எப்படி இதிலிருந்து வெளியே வந்து சாதாரண மனிதனாக மாறத்துடிக்கின்றார் என்பதையும் மிக அழகாக காட்டியுள்ளனர்.
படத்திற்கு மிகவும் பக்க பலமாக இருப்பது விஜியின் வசனமும், இளையராஜாவின் பின்னணி இசையும் தான். அன்பு தான் இந்த உலகம் அதை வெளியில் காட்டாமல் நாம் தான் உள்ளுக்குள்ளே அடக்கி வச்சுகிறோம் போன்ற வசனம் ரசிக்க வைக்கின்றது.
ஆனால், இத்தனை இருந்தும் மிக பொறுமையாக செல்லும் திரைக்கதை, படத்திற்கு இந்த ஸ்லோ தேவை என்றாலும் ஜென்ரல் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்களா ராதாமோகன்.

க்ளாப்ஸ்

நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு, அதிலும் பிரகாஷ்ராஜ் செம்ம ஸ்கோர் செய்கின்றார். விக்ரம் பிரபு- ‘மேயாத மான்’ இந்துஜாவின் காட்சிகள் பிரகாஷ்ராஜ் சொன்ன கதை போல் கிளைமேக்ஸ் வரும் விதம் ரசிக்க வைக்கின்றது.
படத்தின் வசனம் மற்றும் குமரவேல் மதுமிதா தம்பதிகளின் யதார்த்தமான காமெடி.
பிரகாஷ்ராஜ் தன் காதல் கதையை சொல்லும் இடம் கவிதை போல் உள்ளது.
இளையராஜா பின்னணி இசை.

பல்ப்ஸ்

மிக மெதுவாக நகரும் திரைக்கதை.
சமுத்திரக்கனி திருந்தி வாழவேண்டும் என்று நினைக்கும் போது அப்படி ஒரு முடிவு தேவையா...
மொத்தத்தில் கொஞ்சம் பொறுமை இருந்தால் நீங்களும் கண்டிப்பாக இந்த 60 வயது மாநிற மனிதனை தேடலாம்.


 

 

 

 

 

 

 

 

 

சிம்பு வீட்டு கார் முதல் மிக்ஸி வரை பறிமுதலாகும், நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

சிம்பு வீட்டு கார் முதல் மிக்ஸி வரை பறிமுதலாகும், நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

சிம்பு தற்போது தான் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கின்றார். செக்கச்சிவந்த வானம், மாநடு அடுத்து சுந்தர்.சி படம் என்று பிஸியாகவுள்ளார்.
இந்நிலையில் 2013-ல் பேசன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் சிம்புவை வைத்து படம் எடுக்க முன்வந்துள்ளது, அதற்காக ரூ 1 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ 50 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளனர்.
ஆனால், இன்று வரை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை, சிம்புவும் கால்ஷிட்டே கொடுக்கவில்லையாம், தற்போது நீதிமன்றத்திற்கு சென்ற பேசன் மூவி மேக்கர்ஸ் அப்போது ரூ 50 லட்சம் கொடுத்தோம், அதற்கு வட்டி ரூ 33.50 லட்சம்.
அதை எடுத்து வைத்து விட்டு செல்லுங்கள், இல்லையென்றால் அவர் கார், செல்போன் என அனைத்தையும் ஜப்தி செய்யவேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு நீதிபதி ’சிம்பு 4 வாரத்திற்குள் இதற்கான கடன் பாதுகாப்பை அளிக்க வேண்டும், இல்லையென்றால் அவர் வீட்டில் டிவி, கட்டில், மிக்ஸி, கிரைண்டர் வரை பறிமுதல் செய்யப்படும்’ என்று கூறியுள்ளார்.



 

Friday, August 31, 2018

ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்ற சமந்தா: முந்தியடித்து வாங்கிய மக்கள்

ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்ற சமந்தா: முந்தியடித்து வாங்கிய மக்கள்

சென்னை: நடிகை சமந்தா சென்னையில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்றுள்ளார். திருமணத்திற்கு பிறகும் திரையுலகில் சாதிக்க முடியும் என்று நிரூபித்த நடிகைகளில் ஒருவராகியுள்ளார் சமந்தா. நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு அவர் மார்க்கெட் பாதிக்கவில்லை. தமிழ், தெலுங்கில் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

 சமந்தா

சமந்தா படங்களில் நடிப்பதுடன் பிரதியுஷா என்ற அறக்கட்டளையை நடத்தி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்தார் சமந்தார். மேலும் பல சமூக நல பணிகள் செய்து வருகிறார். இந்நிலையில் ஏழைகளுக்கு அளிக்க நிதி திரட்ட காய்கறி விற்றுள்ளார்.


ஜாம்பஜார்

 
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்ற சமந்தா அங்கு காய்கறி கடை போட்டு விற்பனை செய்தார். சமந்தா வந்த செய்தி அறிந்து அங்கு கூட்டம் கூடிவிட்டது. அவர் சொன்ன விலைக்கு காய்கறிகளை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். சிறிது நேரத்தில் அவர் கடையில் இருந்த காய்கறிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது.



 

நடிகை

நடிகையாக இருந்து நிறைய சம்பாதிக்கிறார், ஆந்திராவில் பெரிய இடத்து மருமகளாக உள்ளார். அப்படிப்பட்ட சமந்தா ஏன் காய்கறி விற்பனை செய்ய வேண்டும் என்று நினைக்கலாம். நலிந்த மக்களுக்கு பணம் கொடுக்க காய்கறி விற்றாராம் சமந்தா. அவர் கடையில் அதிக விலை கொடுத்து காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர்.


 

பிரபலங்கள்

லக்ஷ்மி மஞ்சு நடத்தி வரும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்ய ஒரு நாள் கூலி வேலை பார்த்து சம்பாத்தித்து பணம் அளிக்கிறார்கள். பாகுபலி படம் புகழ் ராணா கூட மூட்டை தூக்கி பணம் சம்பாதித்துக் கொடுத்தார். இந்நிலையில் சமந்தா காய்கறி விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசை வைத்திருக்கும் ரசிகர்களா நீங்கள்- அப்போ இந்த விஷயம் கேள்விபட்டீங்களா?

விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசை வைத்திருக்கும் ரசிகர்களா நீங்கள்- அப்போ இந்த விஷயம் கேள்விபட்டீங்களா?

விஜய் சர்கார் பட வேலைகள் படு சூடாக நடக்கிறது. இந்த முறை தீபாவளிக்கு சோலோவாக களம் இறங்குகிறார் விஜய். இந்த படம் அரசியல் சாயல் கொண்ட படம் என்று நமக்கு ஏற்கெனவே வந்த தகவல் தான்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் அரசியலில் குதித்துள்ளனர். விஜய்யும் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசை, ஆனால் அவர் வருவாரா இல்லையா என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும்.
தற்போது ரசிகர்களுக்கு சர்கார் படம் குறித்து ஒரு ஸ்பெஷல் தகவல். இப்படத்தில் விஜய் முதலமைச்சராக நடிப்பதாக தகவல் வருகின்றன. அமெரிக்காவில் இருந்து தேர்தலில் ஓட்டுப்போட சொந்த ஊருக்கு திரும்பும் அவர் தனது ஓட்டு ஏற்கெனவே பதிவானது அறிந்து ஆவேசப்படுகிறார். இதனால் அரசியல்வாதிகள் அவர் மீது பகையாக, அவர்களுக்கு போட்டியாக கட்சி தொடங்கி தேர்தலில் நின்று ஜெயித்து முதலமைச்சர் ஆவது போல் திரைக்கதை அமைத்து இருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து கசிந்த தகவல்.
நிஜமாகவே படத்தின் கதை இப்படி செல்கிறதா இல்லை டுவிஸ்ட் இருக்கிறதா என்பதை தீபாவளி அன்று பார்ப்போம்.

 

மாமா, மாப்புனு பழகி வந்த பாலாஜி-சென்ராயன் இடையே இப்படி ஒரு பிரச்சனையா?

மாமா, மாப்புனு பழகி வந்த பாலாஜி-சென்ராயன் இடையே இப்படி ஒரு பிரச்சனையா?

 

திடீரென்று உயிரிழந்த பிரபல இயக்குனர்- அடுத்தடுத்து மரணத்தால் ரசிகர்கள் சோகம்

திடீரென்று உயிரிழந்த பிரபல இயக்குனர்- அடுத்தடுத்து மரணத்தால் ரசிகர்கள் சோகம்

தெலுங்கு சினிமாவில் 2 நாட்களுக்கு முன் ஒரு அதிர்ச்சியான மரண செய்தி. மறைந்த பிரபல நடிகர் என்.டி.ஆரின் மகனும், ஜுனியர் என்.டி.ஆரின் தந்தையுமான ஹரி கிருஷ்ணா அவர்கள் கார் விபத்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரின் மரண செய்தி கேட்டு பிரபலங்கள் மட்டும் இல்லாது ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் பிரபல பெண் இயக்குனர் ஜெயா அவர்கள் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
இவரின் மரண செய்தி கேட்டதும் மகேஷ் பாபு, வெங்கடேஷ் போன்ற பிரபலங்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


 

Thursday, August 30, 2018

இமைக்கா நொடிகள் திரை விமர்சனம்

இமைக்கா நொடிகள் திரை விமர்சனம்

டிமாண்டி காலானி என்ற வித்தியாசமான பேய் படத்தை கொடுத்து அசத்தியவர் அஜய் ஞானமுத்து. இவரின் இரண்டாவது படம் என்னவாக இருக்கும் என்று நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வர, இரண்டாவது படத்திலேயே நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யூப் என பல நட்சத்திரங்களை வைத்து பிரமாண்ட படைப்பை கொடுத்துள்ளார், இதிலும் அஜய் தேர்ச்சி பெற்றாரா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே கொலை நடக்கின்றது, கொலையும் செய்துவிட்டு பணத்தையும் கேட்டு மிரட்டுகின்றார் அனுராக் காஷ்யுப். நயன்தாரா CBI-யில் வேலைப்பார்க்கின்றார்.
இந்த விஷயம் தெரிந்து பணத்தை கொடுக்காதீர்கள் என்று நயன்தாரா சொல்லியும் அவர்கள் கொடுக்க, வழக்கம் போல் பிணம் தான் அவர்கள் வீட்டிற்கு செல்கின்றது.
இதை தொடர்ந்து இந்த கேஸின் தீவிரத்தை அறிந்து நயன்தாரா களத்தில் இறங்க, இதற்குள் அதர்வா எப்படி சிக்குகின்றார், அனுராக் யார்? எதற்காக இப்படியெல்லாம் செய்கின்றார்? என்பதன் சுவாரஸ்ய திரைக்கதையே இந்த இமைக்கா நொடிகள்.

 படத்தை பற்றிய அலசல்

 நயன்தாரா வாரம் வாரம் இவரை திரையில் பார்த்துவிடலாம் போல, அந்த அளவிற்கு பல படங்கள் வருகின்றது, அதிலும் தரமான கதையாக தேர்ந்தெடுத்து நடிக்கின்றார், இதிலும் அப்படியே CBI ஆபிஸராக மிரட்டியுள்ளார், அதே நேரத்தில் விஜய் சேதுபதியுடனான காதல் காட்சியிலும் மெய் மறக்க வைக்கின்றார், இனி தைரியமாக அடுத்தப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்றே டைட்டில் கார்டே போடலாம்.
அனுராக் காஷ்யுப் தமிழில் முதன் முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார், பாலிவுட்டில் மிகச்சிறந்த இயக்குனராக இருக்கும் இவர் நடிப்பிலும் தனி முத்திரை பதித்துள்ளார், அதிலும் வித்தியாசமாக இரத்தம் உறையாமல் அவர் கொலை செய்வது நமக்கே பகீர் என்று இருக்கின்றது.
அதர்வா-ராஷி கண்ணா திரையில் நன்றாக இருந்தாலும், படத்திற்கு இவர்கள் காதல் கதை பெரிதும் ஒன்றவில்லை, படத்திற்கு இவ்வளவு நேரம் காதல் காட்சிகள் தேவையா? என்பது போல் தான் தோன்றுகின்றது.
படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட் காட்சிகள் நம்மை சீட்டின் நுனிக்கு வர வைக்கின்றது, நாம் யூகிக்கும் எந்த டுவிஸ்டும் படத்தில் இல்லை, நம்மை அசர வைக்கும்படி தான் டுவிஸ்ட் காட்சிகள் உள்ளது.
பாடல்களில் பெரிதும் ஸ்கோர் செய்யாத ஹிப்ஹாப் ஆதி பின்னணியில் மிரட்டி எடுத்துள்ளார், ஒரு விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஏற்ற பின்னணியை கொடுத்து அசத்தியுள்ளார், அதே நேரம் ராஜசேகரின் ஒளிப்பதிவும் பக்க பலமாக உள்ளது.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை, இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து வரும் டுவிஸ்ட் காட்சிகள்.
அனுராஜ், நயன்தாராவிற்கான Cat and mouse போன்ற காட்சிகள் விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றது.
படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள்.

பல்ப்ஸ்

படத்தின் அதர்வா-ராஷி கண்ணா காதல் காட்சிகள், 2.50 மணி நேரம் ஓடும் இப்படத்தில் இவர்கள் வரும் காட்சிகள் கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது. நேரத்தையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் உங்களை கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் இந்த இமைக்கா நொடிகள்.


 

 

 

 

 


 


 

தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட மூட் இல்லை: கமல்



தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட மூட் இல்லை: கமல்

சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இப்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு துவங்க உள்ளது.


 
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களான ஏகே.போஸ், மு.கருணாநிதி மறைந்ததால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தங்களின் பலத்தை நிரூபிக்க அதிமுக முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. ஆர்.கே.நகரில் கோட்டைவிட்டது போல் இங்கே நடக்கக் கூடாது என முதல்வர் ஈபிஎஸ்,துணை முதல்வர் ஓபிஎஸ் உறுதியாக உள்ளனனர். மேலும் மு.க.ஸ்டாலின் திமுக தலைவரானதற்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் திமுகவிற்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்குமா என கேள்வி எழுந்தது. இது குறித்து நேற்று மதுரை விமான நிலையைத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டும் வேலையில் மக்கள் நீதிமன்றம் ஈடுபடும் என்று பதிலளித்தார்.

அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்த டாப் ஹீரோவின் தந்தை

அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்த டாப் ஹீரோவின் தந்தை

Jr. NTR father Nandamuri Harikrishna dies in car crash

 

முதல் மனைவி மற்றும் மகனுக்கு பாலாஜி இப்படி ஒரு துரோகம் செய்தாரா?- நித்யா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

முதல் மனைவி மற்றும் மகனுக்கு பாலாஜி இப்படி ஒரு துரோகம் செய்தாரா?- நித்யா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

பிக்பாஸ் வீட்டின் மூலம் தனக்கு நல்ல எதிர்காலம் அமையும் குடும்பத்துடன் இணைவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தாடி பாலாஜி.
வீட்டில் போட்டியாளர்களை சிரிக்க வைப்பது எல்லாம் சரி ஆனால் இன்னும் மற்றவர்களை பற்றி பின்னால் பேசுவதை அவர் நிறுத்தவே இல்லை. இது மக்களுக்கு பிடிக்காத ஒரு விஷயமாக இருக்கிறது.
இந்த நிலையில் நித்யா, பாலாஜி குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பாலாஜி போஷிகாவிற்காக இப்படி வருந்துகிறார். ஆனால் அவரின் முதல் மனைவி மற்றும் அவரது மகன் தருணை கண்டுகொள்வதே இல்லை.
அவனும் சின்ன குழந்தை, அவன் மனதிலும் தன் அப்பா பிரபலம் என்ற ஆசையெல்லாம் இருக்குமே. ஒரு நாளும் பாலாஜி அவனை பற்றி வெளியே சொன்னது இல்லை. போஷிகாவிற்கு வருந்தும் அவர் தருணுக்கு ஏன் இப்படி மோசம் செய்கிறார் என்பது தெரியவில்லை.
ஆனால் அவர்களுக்காக பாலாஜி ஏங்குகிறார், சில உதவிகளும் செய்கிறார். அது கூட எங்கள் விவாகரத்துக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்று பேசியுள்ளார்.

 

Wednesday, August 29, 2018

அய்யோ, என்னால் ஜீரணிக்க முடியல, தாங்க முடியல: புலம்பித் தள்ளும் ஸ்ரீ ரெட்டி

அய்யோ, என்னால் ஜீரணிக்க முடியல, தாங்க முடியல: புலம்பித் தள்ளும் ஸ்ரீ ரெட்டி 

சென்னை: என்னால் ஜீரணிக்க முடியவில்லை, தாங்க முடியவில்லை என்று நடிகை ஸ்ரீ ரெட்டி ட்வீட்டியுள்ளார். நடிகரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் பலியானார். தந்தையின் உடலை வாங்க மருத்துவமனைக்கு சென்ற நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். கதறி அழுததை பார்த்து ரசிகர்களுக்கு அழுகை வந்துவிட்டது. இந்நிலையில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.


ஸ்ரீ ரெட்டி

நந்தமுரி ஹரிகிருஷ்ணா காருவின் ஆத்மா சாந்தி அடையட்டும். இது எனக்கு பெரிய அதிர்ச்சி. இந்த செய்தியை ஜீரணிக்கவே முடியவில்லை. தாரக் காரு மற்றும் குடும்பத்தாருக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி ட்வீட்டியுள்ளார். #RIPHariKrishnaGaru


நாகர்ஜுனா
பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது என்று அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறினார். தற்போது அவர் இறந்துவிட்டார். உங்களை மிஸ் பண்ணுகிறேன் அண்ணா என்று நடிகர் நாகர்ஜுனா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இன்று நாகர்ஜுனாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.


ராதிகா

நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் திடீர் மறைவு செய்தியை அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு
ஹரிகிருஷ்ணாவின் மரண செய்தி அறிந்து மகேஷ் பாபு கவலை அடைந்துள்ளார். தம்பி ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார் மகேஷ் பாபு.


சமந்தா

ஹரிகிருஷ்ணாவின் மரண செய்தி அறிந்து சமந்தா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஜனனி அம்மா சொன்னதை நிருபித்த பாலாஜி - இன்னும் திருந்தலையா?

ஜனனி அம்மா சொன்னதை நிருபித்த பாலாஜி - இன்னும் திருந்தலையா?

 

என் மாவகாரு எப்பவுமே அழகுதான்: நாகர்ஜுனாவை வாழ்த்தும் சமந்தா

என் மாவகாரு எப்பவுமே அழகுதான்: நாகர்ஜுனாவை வாழ்த்தும் சமந்தா

ஐதராபாத்: நடிகர் நாகர்ஜுனாவுக்கு சமந்தா பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர்,சமூக செயற்பாட்டாளர் என பல தளங்களில் முத்திரை பதித்துள்ள நாகர்ஜுனா தமிழில் ரட்சகன், பயணம், தோழா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இன்று 59 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

 

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நாகர்ஜுனாவுக்கு அவரின் மூத்த மருமகள் சமந்தா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வயதாக ஆக என்னுடைய மாவகாரு (மாமனார்) அழகாகிக்கொண்டே இருக்கிறார். எப்போதும் ஃபன்டாஸ்டிக்காக உள்ளவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அவர் ட்வீட் செய்துள்ளார்


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி நாக சைத்தன்யாவை திருமணம் செய்து நாகர்ஜுனாவின் மருமகளானார் சமந்தா. இது சமந்தா மருமகளான பிறகு சொல்லும் முதல் பிறந்தநாள் வாழ்த்து என்பதால் நிச்சயம் மாமனாருக்கு ஸ்பெஷலானதாகத்தான் இருக்கும். நாகர்ஜுனாவும் சமந்தாவும் இணைந்து மனம், ராஜு காரி காதி 2, த்ராயம் போன்ற படங்களில் நடித்துள்ளனர். என்னைப்போலவே நேரத்திற்கு வருகிறார், எல்லோருடனும் கலகலப்பாக பழகுகிறார் என சமந்தாவை நாகர்ஜுனா புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர், திரையுலகினர் அதிர்ச்சி- ரோட்டில் கிடந்த உடல் (புகைப்படம் உள்ளே)

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர், திரையுலகினர் அதிர்ச்சி- ரோட்டில் கிடந்த உடல் (புகைப்படம் உள்ளே)


 தெலுங்கு சினிமாவில் தற்போது உள்ள மாஸ் நடிகர்களில் ஒருவர் ஜுனியர் என்.டி.ஆர். இவர் படங்கள் வந்தாலே ஆந்திராவே திருவிழா போல் காணப்படும்.
தற்போது என்.டி.ஆரின் மகனும், ஜுனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா இன்று காலை கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவரின் மரண செய்தி தெலுங்கு சினிமா துறையினரை மிகவும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.



 

Monday, August 27, 2018

எச்சரிக்கை, இது நல்ல சினிமாவை கொண்டாடும் இடம்..! - 'எச்சரிக்கை' விமர்சனம்

எச்சரிக்கை, இது நல்ல சினிமாவை கொண்டாடும் இடம்..! - 'எச்சரிக்கை' விமர்சனம்

பணத்திற்காக மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள், இறுதியில் அவர்களது மனநிலை எப்படி மாறுகிறது என்பதே 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்'.

 ணம் கொடுக்கவில்லை எனத் தன் அக்காவைக் கொன்ற மாமாவைக் கொல்லும் 19 வயது பாலகன் டேவிட் (கிஷோர்). அவனுக்கு 10 வயதில் ஒரு மச்சான் தாமஸ் (விவேக் ராஜகோபால்). பதினான்கு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு வெளியே வந்து பார்த்தால் பைக், கார்களை திருடுவது போன்ற வேலைகளில் பிஸியாக இருக்கிறார் தாமஸ். இருவருக்குள்ளும் இருக்கும் பண ஆசை அவர்களை கிட்நாப்பிங் செய்யத் தூண்டுகிறது. யாரைக் கடத்தாலும் என முடிவு செய்து ஸ்வேதாவை (வரலட்சுமி சரத்குமார்) கடத்துகிறார்கள். பின், வழக்கம் போல அவர் அப்பாவிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். அவரும் வழக்கம் போல போலீஸிடம் போகாமல் கொஞ்சம் மாறி ரிட்டயர்ட் டி.ஐ.ஜியான நட்ராஜிடம் (சத்யராஜ்) உதவிக் கேட்கிறார். அவர் கடத்தல்காரர்களை எப்படிக் கண்டுபிடிக்கிறார், அவர்களின் பண ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. 

வசனம், எக்ஸ்பிரஷன்ஸ் எனத் தனக்கான ரோலில் கனக்கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார் கிஷோர். பயம் கலந்த அசிஸ்டென்ட் கடத்தல்காரனாக நடித்தாலும் காதல் காட்சிகளிலும் நம்மை கவர்கிறார் நாயகன் விவேக் ராஜகோபால். வெல்கம் ப்ரோ! ரிச் ஹவுஸ் மாடர்ன் கேர்ளாக வரும் வரலட்சுமிக்கு ஆரம்பத்தில் இந்த கேரக்டர் பொருந்தவில்லை எனத் தோன்றினாலும் போகப் போகப் பழகிவிடுகிறது. அன்டர் கவர் ஆப்ரேஷனில் இறங்கும் ரிட்டயர்ட் டி.ஐ.ஜி சத்யராஜின் நடிப்பில் அவருக்கான அனுபவம் தெரிகிறது. கலர் கலரான சொக்கா அணிந்துகொண்டு 'முப்பது நாளில் இங்கிலிஷ்' பேசும் தாமஸின் ரூம் மேட் யோகி பாபுவை கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தியிருக்கலாம். வரலட்சுமியின் அப்பா கேரக்டரில் நடிப்பவரின் நடிப்பு கதையுடன் ஒட்டவில்லை. 

 ஆரம்பத்தில் போலீஸைத் தவறாகச் சொன்னதற்கு கோபப்படும் சத்யராஜ், இறுதியில் 'வேலை செஞ்சதுக்கு காசு வாங்குறதுல தப்பு இல்லை' என்று வாங்கிய பணத்தை தன் டீமிற்கு பிரித்துக் கொடுக்கும் காட்சிகள் நெருடல். கார்த்திக் ஜோகேஷின் எடிட்டிங்கும் சுதர்ஷன் ஶ்ரீநிவாசனின் ஒளிப்பதிவும் பாடல் காட்சிகளில் சிறப்பு. அதைக் கதையிலும் செய்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும். ஒரு சில டாப் ஆங்கிள் காட்சிகளில் கேமராவை கையாண்ட விதம் அருமை. சுந்தரமூர்த்தியின் இசையில் 'காலம் உன்னைக் களவு செய்யும் நேரம்' என்ற பாடல் திரையரங்கைவிட்டு வெளியில் வந்தாலும் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசை அழுத்தமாக இருந்திருந்தால் கதையை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச்செல்ல உதவியிருக்கும். 

படத்தின் கதாபாத்திரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாகத் திரைக்கதை அமைத்திருக்கலாம் எனத் தோன்ற வைக்கிறது. வழக்கமான படங்களில் வரும் கால் ட்ரேசிங், போன் ஹாக்கிங் போன்ற வழக்கமான காட்சிகள் இந்தப் படத்திலும் இடம்பெற்றிருப்பது சலிப்படையச் செய்கிறது. குரலை வைத்துக் கண்டுபிடித்துவிடுவார்கள் என டாக்கிங் டாமை பயன்படுத்தியிருப்பது புதுமை. போகிற போக்கில் சத்யராஜின் ஃப்ளாஷ்பேக்கை சொல்லியிருப்பதால் அது எமோஷனை கடத்தத் தவறுகிறது. கடத்தல் பிளானில் நடக்கும் ட்விஸ்ட்டை மக்கள் கணிக்காமல் இருக்க இயக்குநர் சர்ஜுன் இன்னும் 'எச்சரிக்கை'யாக இருந்திருக்கலாம். 'இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற தலைப்பிற்காகவாவது இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் வெயிடேஜ் கொடுத்திருக்கலாம்.  சிம்பிளாக சொல்லவேண்டும் என்றால் ஷார்ட் ஃபிலிம் மோடிற்கு நம்மை கூட்டிச் செல்கிறார் இயக்குநர் சர்ஜுன்.


புது கதை புது படம் என்று சொல்லிவிட்டு 'இது அதுல்ல' எனப் பார்ப்பவர்களை தோன்றவைக்கும் படங்களுக்கு மத்தியில் மூன்று படங்களின் இன்ஸ்பிரேஷன் என்று அதன் பெயர்களைப் படத்தின் இறுதியில் பதிவு செய்திருப்பதற்கு பாராட்டுகள். ஆனால், அடுத்த முறை  திரைக்கதை அமைப்பதில் 'எச்சரிக்கை'யாக இருங்கள் சர்ஜுன். இது நல்ல சினிமாவை கொண்டாடும் இடம். 
'லக்ஷ்மி' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்..!

டிக்டிக்டிக் பட இயக்குனரின் அடுத்த படம் இந்த முன்னணி இயக்குனருடன் தானாம்!

டிக்டிக்டிக் பட இயக்குனரின் அடுத்த படம் இந்த முன்னணி இயக்குனருடன் தானாம்!

ஜெயம் ரவியை வைத்து டிக்டிக்டிக் என்ற விண்வெளி கதையம்சம் உள்ள படத்தை இயக்கியவர் சக்தி சௌந்தர்ராஜன். இவர் இதற்கு முன்பும் இதே ஜெயம் ரவியை வைத்து மிருதன் படத்தை இயக்கியிருந்தார்.
இவர் தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இவரது அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பவர் ஆர்யா தானாம். ஆர்யா கடைசியாக நடித்த கஜினிகாந்த் சரியாக ஓடவில்லை.
இதனால் மார்கெட் இழந்து தவிக்கும் அவருக்கு இந்த படமாவது ஹிட் தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த படத்தை Studio Green சார்ப்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.